Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » டிஜிட்டல் மார்க்கெட்டிங் » டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1  
டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1  

டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1  

இன்டர்நெட் இன்றைய இளசு பெருசு என்ற பேதமின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு காந்தம். இதுவரையில் தன் வலையில் பல பில்லியன் மக்களை வீழ்த்தி வைத்திருக்கும் இன்டர்நெட் வருங்காலத்தில் ஒரு கடவுளாக கூட வணங்கப்படலாம்.

அதே போன்று வருங்காலத்தில் இன்டர்நெட் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது, என்ற நிலை வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இன்டர்நெட் அறிமுகம் செய்யப்படும் போது  இன்டர்நெட் இவ்வளவு வேகமாக வளரும் என்பதையோ அல்லது அதை சார்ந்து பல வெப்சைட்கள் உருவாகும் என்பதனையோ யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அத்தணை வேகத்தில் வளர்ந்த இன்டர்நெட் இன்று பல பரிமாணங்களை பெற்று அசைக்கமுடியாத ஆலமரம் போல் வளர்ந்திருக்கிறது என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்டர்நெட் உலகம் பல பிரிவுகளாக பிரிந்து இயங்கிகொண்டிருந்தாலும் இந்த தொடரில் நாம் டிஜிட்டல் மார்கெட்டிங் பற்றிய விஷயங்களை பார்க்கப் போகின்றோம்.

தொடர்ந்து வரவிருக்கும் இந்த தொடர் உங்கள் வாழ்கையை, பிசினசை அல்லது உங்களுக்குள் இருக்கும் வேறொரு பரிமாணத்தை திறக்கும் திறவுக்கோளாக இருக்கும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கின்றது.

இன்றைக்கு எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஆசை என்னவென்றால் சம்பளத்தோடு, “ ஒரு சைடு பிஸினஸ் மூலமாக கொஞ்சம் வருமானம் வந்தால் கொஞ்சம் வசதியாக இருக்குமே” , என்பதுதான்.

இதில் ஒன்றும் தவறு இல்லை. கொஞ்சம் பணம் கூடுதலாக இருந்தால் மனைவி மக்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளலாம். குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கலாம். நாமும் சமுதாயத்தில் கொஞ்சம் தலை நிமிர்ந்து வாழலாம்.

ஆனால் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்பதுதான் கேள்விக்குறி?

அதற்காகத்தான் இந்த தொடர் கட்டுரை. தொடர்ந்து படித்து வாருங்கள் உங்கள் கமெண்ட்களை கீழே பதியுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்

அடுத்த பதிவில் சிந்திப்போம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.