Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » பணம் செலுத்த சில சிறந்த வழிகள்
பணம் செலுத்த சில சிறந்த வழிகள்

பணம் செலுத்த சில சிறந்த வழிகள்

கடந்த சில தினங்களாகவே மத்திய அரசின் ரூ. 500/1000 நோட்டுகள் இனிமேல் செல்லாது என்ற அதிரடி முடிவினை கேட்டு மக்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள். எல்லாமே பணம்தான் என்று மாறிப்போன நேரத்தில், பணம் கொடுக்காமல் எதை வாங்க முடியும். காலையில் எழுந்து டீ கடையில் சுகமாக பேப்பர் பார்த்துக்கொண்டே டீ –யை உறுஞ்சும் சுகம் கூட நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது போல் உணர முடிகிறது.

குழந்தைக்கு பால், நோயில் இருப்பவர்களுக்கு மருந்து, பஸ்ஸில் பயணிக்க சில்லறை, மளிகை பொருள், என்று எதுவும் வாங்க முடியாமல் நம்மை போன்ற சாதாரண எளிய மக்கள் சிரமத்தில் இருக்கும் இவ்வேளையில் இந்த பதிவை எழுதியாக வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

(நான் இந்த பதிவினை 7 நாட்களுக்கு முன்பே எழுதி வைத்துவிட்டேன். ஆனால் உரிய நேரத்தில் பிரசுரிக்க முடியவில்லை. இருப்பினும் யாருக்காவது இது உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் மிக தாமாதமான போதும் பிரசுரிக்கிறேன். ) 

நான் கூறப்போகும் விஷயங்கள் சில நேரங்களில் நகரங்களுக்கு மட்டுமே பொருந்தலாம்.

டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு

கையில் பணம் இல்லை அல்லது சில நூறு ரூபாய் நோட்டுகள் மட்டும்தான் கையில் இருக்கிறது என்றால், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தக்கூடிய பிஒஎஸ் (POS – Point of Sale Machine) இயந்திரம் உள்ள கடைகளில் தேவையான மளிகை பொருட்களை வாங்கலாம். சென்னை உள்ளிட்ட எல்லா ஊர்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்களிலும் இந்த இயந்திரம் இருக்கும், அதனால் கவலை இல்லை. எவ்வளவு பொருட்கள் வேண்டுமானாலும் வாங்கிக்கொண்டு, டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மூலம் ஸ்வைப் (SWIPE) செய்து பணம் செலுத்தலாம்.

வாலெட்

பேடியம், ப்ரீசார்ஜ், அக்சிஜென், ஐசிஐசிஐ பாக்கெட்ஸ போன்ற பண வாலெட் ஆப்களை கூகிள் பிளே ஸ்டோர்களில் இருந்து தரவிறக்கம் செய்து பணம் செலுத்த பயன்படுத்தலாம். பெரு நகரங்களில் கேப்களில் பயணிக்க, மொபைல் ரீசார்ஜ் செய்ய, ஆன்லைனில் பொருட்கள் வாங்க என்று சில சேவைகளுக்கு வாலெட்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இன்டர்நெட் பேங்கிங்

மற்றவருக்கு பணம் அனுப்ப, இன்டர்நெட்/டெலிபோன் போன்ற பில்களை செலுத்த, மொபைல் ரீசார்ஜ் செய்ய, ஆன்லைனில் பொருட்கள் வாங்க என்று பல்வேறு தேவைகளுக்கு இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

காசோலை

பெரிய தொகை செலுத்த வேண்டிய இடங்களில் காசோலை ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் பணபரிமாற்றத்தை காசோலை மூலம் நிறைவு செய்ய முடியும்.

ஆன்லைனில் டெபிட் அல்லது இன்டர்நெட் பேங்கிங்  மூலம் பொருட்கள் வாங்க பயன்படும் சில தளங்கள்

உணவு வாங்க : https://jusfood.com/  https://www.foodpanda.in/ https://www.zomato.com/

பொருட்கள் வாங்க https://www.flipkart.com/  http://www.amazon.in/ https://www.snapdeal.com/

மளிகை பொருட்கள் வாங்க https://grofers.com/  http://www.bigbasket.com/

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய https://www.makemytrip.com/railways/ https://www.irctc.co.in/eticketing/loginHome.jsf

பஸ் டிக்கெட் முன்பதிவு செய்ய www.redbus.in

கேப் முன்பதிவு செய்ய ola செயலி

திரைப்படம் முன்பதிவு செய்ய: http://bookmyshow.com

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.