Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ அல்ட்ரா அறிமுகம்
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ அல்ட்ரா அறிமுகம்

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ அல்ட்ரா அறிமுகம்

தற்போது மொபைல் போன்களில் போட்டிப்போட்டுக் கொண்டு விற்பனை செய்யும் நிறுவனங்களில் சோனியும் ஒன்றும். ஆரம்ப காலங்களில் இருந்து தரத்திற்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம், தற்போது சந்தையில் பல புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்துக் கொண்டுத்தான் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ அல்ட்ரா என்னும் ஃபோனை சோனி அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த ஃபோனின் விலை மற்றும் சந்தைக்கு வரும் தேதி என எதுவும் இதுவரை அறிவிக்காவிட்டாலும், தனது இணையதளத்தில் இந்த ஃபோன் குறித்த முழு விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த போன் ஆன்ட்ராய்டு 6 வது பதிப்பான மார்ஸ்மாலோவில் செயல்படக்கூடியது.

படிங்க: விவோ 6 ஜிபீ ரேம் கொண்ட முதல் போன்

இந்த போனில் 21.5 எம்பீ பின்பக்க ஆட்டோபோக்கஸ் கேமெராவும், முன்பக்கத்தில் செல்பி படங்கள் எடுக்க 16 எம்பீ திறன் கொண்ட கேமெராவும் உள்ளது. இதனால் புகைப்பட விரும்பிகள் மற்றும் செல்பி விரும்பிகள் இந்த போனை வெகுவாக விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

xperia xa selfie

இந்த ஃபோனில் ஒரு சிம் மட்டும் பயன்படுத்த முடியும். (நானோ சிம்). இதன் திரை  6 இன்ச் அளவு உடையது.  16- ஜிபீ இன்டெர்னல் மெமரி உள்ளது, மேலும் தேவையெனில் 200 ஜிபீ வரை மெமெரி கார்ட் பயன்படுத்திக்கொள்ளலாம்.

படிங்க: அழைப்பவர் யாரென்று தெரியுமா ? – “ட்ரூ காலர்”

இந்த ஃபோனை நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாளைக்கு சார்ஜ் நீடிக்கும் என்று சோனி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக விசேஷமாக புதிதாக சார்ஜர் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Xperia XA charger

Xperia XA Specifications

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*