Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » 75 GB 4G டேட்டா ரூபாய். 200 – ரிலையன்ஸ் ஜியோ
75 GB 4G டேட்டா ரூபாய். 200 – ரிலையன்ஸ் ஜியோ

75 GB 4G டேட்டா ரூபாய். 200 – ரிலையன்ஸ் ஜியோ

ஸ்மார்ட் போன்களின் வரவுக்கு பின்னர் இன்டர்நெட் பயன்பாடு பெருகிவிட்டது. அதற்கு தகுந்தாற்போல், இச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு விலையை அவ்வப் போது ஏற்றி இறக்கி கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது இந்தியாவை பொறுத்தவரையில் 4G சேவைகளை அளிப்பதில் ஏர்டெல் நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது.

ஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் -முழு பதிவு இங்கே

இந்நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த 4G சந்தையை பிடிப்பதற்காக ரிலையன்ஸ் தனது ஜியோ ஏன்னும் 4G சேவையை அறிமுகம் செய்யவிருக்கிறது. கடந்த ஆண்டு இது பற்றி செய்தி வெளியிட்ட அந்நிறுவனம் வருகின்ற 2016  ஏப்ரல் மாதத்தில் பொதுமக்கள் பயன்படுத்த எங்களது 4G சேவைகளை அறிமுகம் செய்வோம், அதுவரையில் சோதனை அடிப்படையில் எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் இச்சேவை அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது என்று கூறியிருந்தது.

படிங்க: அழைப்பவர் யாரென்று தெரியுமா ? – “ட்ரூ காலர்”

இதனடிப்படையில், தற்போது இந்த சேவை முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகம் செய்து வைக்கப்படும். ரிலையன்ஸ் 4G சேவையினை பெற, அதற்கான சிம் கார்டு ஒன்றை வாங்க வேண்டும். இதனை தேவையான சான்றுகள் கொடுத்து அருகில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டோரில் இருந்து வாங்கிக்கொள்ளலாம்.

படிங்க: சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

சிம் விற்பனையின் போது, தங்களது ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாக சில ஆங்கில இணையதளங்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு சிம்-மின் விலை ரூ. 200 ஆக இருக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இந்த சிம்- மில் 75 GB 4G டேட்டா, 4500 நிமிடங்கள் பேசக்கூடிய டாக் டைம் போன்றவை இருக்கும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

படிங்க:  வெப் டிசைன் பயிற்சி ! நீங்க ரெடியா ?

இது போன்ற திட்டம் வெளிவரும் போது நிச்சயம் இதே துறையில் இயங்கும் மற்ற நிறுவனங்களின் விற்பனை தலைக்கீழாக மாறும் என்பதில் எந்தவித ஐயமில்லை என்ற போதிலும், வாடிக்கையாளர்களை போல், இன்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனங்களும் இந்த சேவையினை ஆவலாக எதிர்பாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

2 comments

  1. tk u friend for u r info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*