Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » நுபியா Z 11 மினி ஸ்மார்ட் போன் வெளியானது
நுபியா Z 11 மினி ஸ்மார்ட் போன் வெளியானது

நுபியா Z 11 மினி ஸ்மார்ட் போன் வெளியானது

சீன நிறுவனமான நுபியா (Nubia) தனது புதிய ரக போன் மாடலான நுபியா Z11 ஸ்மார்ட் போனை நேற்று வெளியிட்டது. கைரேகை சென்சார், 4G Lte போன்ற சகல வசதிகளுடன் வெளியாகியுள்ள இந்த ஃபோனுக்கு இந்திய சந்தையில் கடுமையான வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஃபோனின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தோமானால், 5 இன்ச் டிஸ்ப்ளே, 16 எம்.பீ பின்புற கேமரா மற்றும் 8 எம்.பீ முன்பக்க கேமரா, இரட்டை சிம் பயன்பாடு என்று சொல்லலாம். இருப்பினும் இந்த ஃ போனில் கூடுதலாக பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Finger Print Scanner ) கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இதுப் போன்ற ஃபோன்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்கேனர்களை கொண்டு போன்களை அன்லாக் (Unlock) மட்டுமே செய்ய முடியும். ஆனால் இந்த ஃபோனில் உள்ள பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை கொண்டு சாதாரணமாக ஃபோனின் இயக்கங்களை செய்ய முடியும்.

படிங்க : ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்

இந்த ஃபோனில், 3 ஜீபீ ராம்- உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப் டிராகன் 617 ப்ராசஸ்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு 64 ஜீபீ இன்டெர்னல் மெமரியும் உள்ளது. தேவையெனில் 200 ஜீபீ வரை உள்ள எஸ்.டீ கார்டுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

2800mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியினை கழட்ட முடியாது. வருகின்ற ஏப்ரல் 25- ஆம் தேதி முதல் நிறுவனத்தின் இணையதளத்தில் விற்பனைக்கு வரும் இந்த ஃபோனின் விலை ரூ. 15,000/- என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

படிங்க : தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்

கணினி குறித்து சந்தேகம் இருந்தால், இந்த படிவத்தில் உங்கள் கேள்வியினை கேட்கலாம். முடிந்த வரை உடனடியாக பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*