Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » ரூ. 9,450-க்கு புதிய விவோ Y31L 4ஜீ போன்
ரூ. 9,450-க்கு புதிய விவோ Y31L 4ஜீ போன்

ரூ. 9,450-க்கு புதிய விவோ Y31L 4ஜீ போன்

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ தற்போது விவோ Y31L என்ற புதிய மாடல் போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஃபோன் சிறப்பான வகையில் இயங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே உலகின் முதல் 6 ஜீபீ ராம் கொண்ட ஃபோனை அறிமுகம் செய்தது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இது பற்றிய பதிவை நமது தமிழ் எக்ஸ்ப்ளோரர் தளத்தில் ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆர்வமுள்ளோர் கீழே கிளிக் செய்து படிக்கலாம்.

படிங்க: விவோ 6 ஜிபீ ரேம் கொண்ட முதல் போன்

தற்போது அறிமுகமாகியுள்ள விவோ Y31L (Vivo Y31L), இரட்டை சிம் பயன்பாடு கொண்டது. ஆன்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஃபன் டச் 2.1 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஃ போனில் 4G பயன்படுத்த முடியும்.

இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள்

1. 4.7-inch qHD (540×960 pixels) ஐபீஎஸ் டிஸ்ப்ளே

2. 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்நாப் டிராகன் 410 ப்ராசெஸ்சருடன் சிறப்பான வேகத்திற்காக 1 ஜீபீ ராம் உள்ளது.

3. 16 ஜீபீ இன்டெர்னல் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. தேவையெனில் 128 ஜீபீ வரை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இணையதளம் துவங்குவது குறித்த சந்தேகமா? என்னை கேட்கலாம் 

4. பிளாஷ் -வுடன் 8 மெகா பிக்சல் பின் பக்க கேமெராவும், 5 மெகா பிக்சல் முன் பக்க கேமெராவும் இதிலுள்ளது. இந்த கேமெராக்களை கொண்டு முழு நீள ஹட்ச் டி படங்களை எடுக்க முடியும்.

5. இதிலுள்ள வசதிகளை சிறப்பாக அதிகம் நேரம் கையாள 2200mAh திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

படிங்க: அழைப்பவர் யாரென்று தெரியுமா ? – “ட்ரூ காலர்”

6. விவோ Y31L போனின் அளவு: 137.2×68.7×8.3mm, எடை: 133 grams.

இந்த ஃபோனின் விலை ரூ. 9,450/-

சிறப்பான வசதிகளோடு ரூ.10,000/- த்திற்குள் ஃபோன் வாங்க நினைப்பவர்கள் இந்த ஃபோன் வாங்கலாம்.

படிங்க: ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*