Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » வேலை தேட ஒரு செயலி
வேலை தேட ஒரு செயலி

வேலை தேட ஒரு செயலி

ஒரு வருடத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் பட்டதாரிகள், தங்கள் படிப்பினை முடித்து விட்டு, பல கனவுகளோடு கல்லூரியை விட்டு வெளி வருகிறார்கள். ஆனால் வெளியுலகம் அவ்வளவு சுலபம் இல்லை. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடுகின்றது என்று படித்த பட்டதாரிகள் ஒரு புறம் சொல்ல, இன்னொரு புறம் வேலையெல்லாம் நிறைய இருக்கிறது. தகுதியான நபர்கள் தான் இந்தியாவில் பஞ்சம் என்கிறது வேலைவாய்பு நிறுவனங்கள்.

எது எப்படி இருப்பினும், வேலை தேடுபவர் சுலபமாக வேலை தேடி, நேர்காணலில் பங்கேற்க உதவும் ஈ-பாய்ஸ் என்னும் செயலி பற்றிதான் இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.

படிங்க:கைநிறைய சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி மொழிகள்

இந்தியாவை சேர்ந்த சச்சின் அகர்வால் மற்றும் பிஷன் சிங் ஆகிய இந்த இரண்டு பேரும் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலியை நீங்கள் தரவிறக்கம் செய்து உங்கள் போனில் பதிந்து கொண்ட பின்பு, இந்த செயலியில் ஏற்கனவே பதிவு செய்துள்ள நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் உங்களுக்கு காட்டப்படும்.

படிங்க: E- Mail ல கண்டுபிடிச்சவர் நம்ம அய்யாதுரை

அதில் உங்களுக்கு தகுந்த வேலையை நீங்கள் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்தால், அந்த நிறுவனங்கள் முதற்க்கட்டமாக உங்களை செயலிலேயே தேர்வு எழுத சொல்வார்கள். இந்த தேர்வினை நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டால், பின்னர் நீங்கள் நேரடியாக நிறுவனத்திற்கு அடுத்த கட்ட நேர்க்கானலுக்கு அழைக்கப்படுவீர்கள். நீங்கள் அந்த தேர்விலும் வெற்றி பெரும் பட்சத்தில் உங்களுக்கு வேலை வழங்கப்படும்.

இந்த செயலியின் மூலம் வேலை தேடுபவருக்கும், வேலை கொடுப்பவருக்கும் நன்மைகள் பல உள்ளன. அதாவது வேலை தேடுபவர் தனக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுத்து விண்ணபிக்கலாம். அதே போன்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முதற்கட்ட தேர்வை எதிர்க் கொள்ளலாம். அதே போல் வேலை கொடுக்கும் நிறுவனங்களும், பல பேரை நேர்காணலுக்கு அழைத்து நேரத்தை வீணாக்காமல், முதற்கட்ட தேர்வில் வெற்றி பெறுபவர்களை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்துவது மூலமாக, சிறந்த நபர்களை தேர்வு செய்ய முடியும்.

படிங்க: நீங்கள் பிசினஸ் துவங்கும் முன் உங்களுக்கான 5 கேள்விகள்

இந்த செயலியை பற்றி இதுவரை முன்னணி நிறுவனங்கள் பல சிறப்பான  கருத்துகளையே பகிர்ந்து வருகின்றனர். அதோடு, அவர்கள் நிறுவன வேலைவாய்ப்பு தகவல்களும் இந்த செயலியில் பதிவேற்றப்படுகின்றன. அதனால் நீங்களும் இந்த செயலியை பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

செயலி தளம் செல்ல : http://www.epoise.com/

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*