Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » மைக்ரோமாக்ஸ் கான்வாஸ் டேப் P 702
மைக்ரோமாக்ஸ் கான்வாஸ் டேப் P 702

மைக்ரோமாக்ஸ் கான்வாஸ் டேப் P 702

இந்திய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமாக்ஸ் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்களை வடிவமைத்துக் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தற்போது டேப் வரிசையில் புதிதாக மைக்ரோமாக்ஸ் கான்வாஸ் P702 என்ற டேபை வெளியிட்டுள்ளது. சிறப்பான வசதிகளுடன் வெறும் ரூ. 7,999 க்கு விற்பனைக்கு வரும் இந்த டேப் அனைவரும் வாங்க ஏற்றதே.

7 இன்ச் HD திரைக்கொண்ட இந்த டேப் ஆன்ட்ராய்டு லாலிபாப் 5.1 ல் இயங்கக்கூடியது. குவாட் கோர் மீடியாடெக் ப்ராசெஸ்சர் உடன் 2 ஜிபீ ரேம் உள்ளது. இன்டெர்னல் மெமரி 16 ஜிபீ. தேவையெனில் 32 ஜிபீ வரை உள்ள மெமரி கார்டு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

படிங்க: உலகின் முதல் 6 ஜிபீ ரேம் கொண்ட போன்

படிங்க: ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்

கேமராவை  பொறுத்தவரை, பிளாஷ் லைட்டோடு 5 எம்பீ பின் பக்க கேமரா, செல்பி எடுக்க 2 மெகா பிக்சல் கேமரா. ஆனால் செல்பி போன்றவற்றை எடுக்க இந்த கேமரா திறன் போதாது.

படிங்க: உங்கள் படத்தை கார்டூனாக மாற்ற ஒரு செயலி

சிறப்பான வசதிகளாக இந்த டேபில் 4G LTE,  Wi Fi, ப்ளூடூத் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 3000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ஸ்நாப் டீல் தளத்தில் கிடைக்கும் இந்த டேபினை வாங்கும் போது இலவசமாக ரூ. 15000/- மதிப்புள்ள ஈ புக் பரிசாக வழங்கப்படும்.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*