Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » விவோ 6 ஜிபீ ரேம் கொண்ட முதல் போன்
விவோ 6 ஜிபீ ரேம் கொண்ட முதல் போன்

விவோ 6 ஜிபீ ரேம் கொண்ட முதல் போன்

ஆன்ட்ராய்டு போன் முதன்முதலாக அறிமுகம் ஆனபோது அதிலிருந்த வசதிகள் மிகக்குறைவு, இன்டெர்னல் மெமரி முதல் ரேம், கேமரா என்று எல்லாமே ஒரு சீரான அளவிலயே இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை. இரண்டாயிரம் ரூபாயில் கிடைக்கும் ஸ்மார்ட் போனிலயே அவ்வளவு வசதிகள் இருக்கின்றன.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும். தற்போது சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ, விவோ எக்ஸ் ப்ளே 5 என்ற போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போனில் 6 ஜிபீ ரேம் பொருத்தப்பட்டுள்ளது. இது வரை வந்த ஆன்ட்ராய்டு போன்களில் 4 ஜிபீ ரேம் மட்டுமே பொருத்தப்பட்டு வந்தது. ஆனால் முதன் முதலாக வேகத்தை இன்னும் கூடுதலாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விவோ 6 ஜிபீ ரேம் கொண்ட போனை வெளியிடவிருக்கிறது. அதோடு இந்த போன் 6 இன்ச் ஹச்.டீ திரை உடையது.  4300 mAh பேட்டரி, மற்றும் 16 எம்பீ பின்பக்க கேமரா கொண்டது.

படிங்க: ரூ. 6999 விலையில் 4ஜி ஸ்மார்ட் போன்

ரேம் என்பது வேகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்று அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த போன் பற்றி பேசும்போது, ஸ்மார்ட் போன் வல்லுனர்கள் தற்போது 6 ஜிபீ ரேம் கொண்ட போன்கள் நமக்கு தேவையா என்ற ரீதியில் போகிறார்கள்.

படிங்க:  என்.எப்.சி என்றால் என்ன ?

தற்போது இயங்கும் எந்த செயலிக்கும் 6 ஜிபீ ரேம் கொண்ட போன் தேவையில்லை, ஆனாலும் இது போன்ற தயாரிப்புகள் எதிர்கால ஸ்மார்ட் போன்களுக்கு தேவை. எனினும் தற்போது வெளிவர காத்திருக்கும் இந்த போன் இது வரை வெளிவந்த ஸ்மார்ட் போன்களை காட்டிலும் சிறப்பாக வேலை செய்யும் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் என்னை என் தொடர்பு எண்ணுக்கு அழைக்கலாம் [+918189919372]. அல்லது இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.