Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » வெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை
வெப் சைட்  ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை

வெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை

ஒருவர் ஒரு இணையதளம் ஆரம்பிக்க தேவையானவற்றில் இந்த இரண்டும் முக்கியமாக வேண்டும். அதன் படி அந்த இரண்டும் என்னவென்று இந்த பதிவில் கூறியுள்ளேன்.

சரி முதலில் இணையதளம் ஆரம்பிக்க

  1. டொமைன் நேம் (Domain Name)

உங்கள் வெப் சைட்டின் பெயரை தான் டொமைன் நேம் என்று சொல்வார்கள். அதாவது உங்கள் தளத்திற்கு வர விரும்பும் ஒருவர் www.google.com அல்லது facebook.com என்று டைப் செய்வாரே அதுதான் டொமைன் நேம்.

2. ஹோஸ்டிங் (Hosting)

நீங்கள் இணையத்தளம் ஆரம்பித்தால் அதற்குண்டான பைல்களை எங்கு சேமித்து வைப்பீர்கள். இதற்க்குதான் இணையத்தில் ஹோஸ்டிங் என்றொரு இடம் வாங்க வேண்டும்.

மேலே சொன்ன இந்த இரண்டையும் அதற்கான வெப் சைட்களுக்கு சென்று பணம் செலுத்தி வாங்க வேண்டும். இந்த இரண்டையும் வாங்கினால்தான் உங்கள் வெப் சைட்டை  இயங்க வைக்க முடியும்.

சாதாரணமாக ஹோஸ்டிங் மற்றும் டொமைன் நேம் வாங்குவதற்கு 2000 முதல் 5,000 வரை செலவு ஆகும். நான் இதே துறையில் பல ஆண்டுகாலம் இருப்பதால் சில இடங்களில் தள்ளுபடி விலையில் வாங்குவேன்.

ஹோஸ்டிங் மற்றும் டொமைன் நேம் வாங்க இங்கு கிளிக் செய்யலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

10 comments

  1. உள்ளுரில் விசாரித்ததில் நீங்கள் சொல்வது உண்மை.இன்று வெப்சைட் தளம் அமைக்க 5000 வரை கேட்கிறார்கள். தாங்கள் சேவை மனப்பான்மையில் இந்த தகவலை நுனுக்கத்தை மக்களுக்கு அளிக்கிரீர்கள். இந்த துறையை வளம் பெற செய்கிறீர்கள். இறைவன் அருள் உங்களுக்கு உண்டு.தாங்கள் தரும் ஊக்கத்தில் வெப்சைட் உருவாக்க கற்க போகிறேன். ஆதறவுக்கு நன்றி

  2. Jambulingam Arumugam

    நான் ஒர் ஓய்வுபெற்ற 75 வயதை கடந்த அரசு ஊழியன். மேற்படி வெப்சைட் தொடங்குவதால் எந்த வித்த்தில் பயனடைய முடியும். இப்பொழுது பொழுது போக்குவதற்காக கனினி, பேஸ்புக், வாட்ஸ்அப் முதலியவைகளில் நேரத்தை ஓட்டுகின்றோம் . உண்மையிலேயே இதனால் கனிப்பொறி அறிவும் அதனால் கிடைக்கும் நண்மைகளும் எந்த அளவுக்கு கிடைக்கும் என்று தெரிந்தால் மிகவும் நலமாக இருக்கும் .

    • ஒருவர் இணையதளம் தொடங்குவதால் நன்மைகள் இவ்வளவு என்று வரையறுத்து விடமுடியாது. தொடக்க காலத்தில் விளையாட்டாக ஆரம்பித்த இந்த இணையதளத்திற்கு இன்று உலகம் முழுவதும் இருந்து, மாதம் 10,000/- பார்வையாளர்கள் வருகிறார்கள். அப்படியெனில் நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் எதோ ஒன்றை கற்பித்து கொண்டிருக்கிறீர் என்றுதானே அர்த்தம். உங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பதே. அதோடு, புத்தகம் எழுத அழைப்புகள் வரலாம்.. டி.வீ நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு அழைப்புகள் வரலாம். உங்கள் தளம் இணையத்தில் எங்கெங்கோ செல்வதால், வாய்ப்புகள் எப்படி வேண்டுமானலும் வரலாம் அதனால் உங்களுக்கு 100% நன்மைகள் மட்டுமே உண்டு. இதனால் எந்த தீமையும் விளைய போவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*