Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » இலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்
இலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்

இலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்

நீண்ட நாட்களாக எனக்கொரு குறை உண்டு. நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் ஏதேனும் செய்திட வேண்டும் என்று அவ்வபோது நினைப்பேன். ஏனோ கால சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு செய்யமுடியாமல் போய்விடும். எனினும் தற்போது நிச்சயம் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். என்ன அரம்பம் ரொம்ப தூக்கலா இருக்குன்னு பார்க்குறீங்களா. மேலே படிங்க 

அதன் படி, ஆர்வம் உள்ள  20 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக வெப் டிசைனிங் சொல்லிக்கொடுக்கலாம் என்று கருதியுள்ளேன். பொதுவாக ஒருவருக்கு வெப் டிசைனிங் சொல்லிக்கொடுக்க நான் 4,000 ரூபாய் முதல் 10,000 வரை வசூலிப்பது வழக்கம்.

ஆனால் எனக்கு அவ்வபோது போன் செய்யும் பலர், அவ்வளவு பணம் என்னிடம் இல்லை, ஆனால் வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதை என் நண்பனிடம் சொன்னபோது, எல்லாருக்கும் உன்னால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும்  குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் செய்யலாமே என்றார்.

அதன் படி பயிற்சி துவங்கவுள்ளது. இந்த பயிற்சியை பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆன்லைன் வகுப்புகளின் மூலம் நடத்தலாம் என்றுள்ளேன்.அதாவது நீங்கள் வீட்டிலிருந்த படி என் பாடங்களை கேட்கலாம்.

இதற்கு என்னுடையே பயிற்சி கட்டணம் என்று எதுவும் இல்லை.முற்றிலும் இலவசம். ஆனால் நான் சொல்லும் பாடங்களை  நீங்கள் செய்து பார்க்க மட்டும் டொமைன் நேம், ஹோஸ்டிங் வாங்க வேண்டும்.

டொமைன் நேம் என்றால் -வெப் சைட்டின் முகவரி

ஹோஸ்டிங் என்றால் – உங்கள் வெப் சைட்டின் பைல்களை சேமித்து வைக்கும் இடம்.

அதற்கு மட்டும் ரூ. 1000/- செலவு பிடிக்கும். இதை எதற்காக சொல்கிறேன் என்றால்,  இலவசம் என்று சொன்னீர்கள், பிறகு எப்படி பணம் வசூலிக்கிறீர்கள்  என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா ? அதற்காகத்தான்.

உங்களால் முடிந்தால் டொமைன் மற்றும் ஹோஸ்டிங்களை நீங்களே வாங்கிக் கொள்வது நல்லது. ஆனால்  என் பயிற்சி மட்டும் இலவசம்.

பயிற்சிக்கு வேண்டியவை

  1. சிறந்த கணினி,
  2. இன்டர்நெட்,
  3. ஹெட் போன் (மொபைல் போன் ஹெட் செட் கூட போதும்) இருக்க வேண்டும்
  4. ஹோஸ்டிங் மற்றும் டொமைன் நேம்  வாங்க ரூபாய். 1000/- (இந்த பணத்தை என்னிடம் செலுத்த தேவையில்லை)

இந்த பயிற்சி எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கும். அதனால் எல்லா வயதினரும் கலந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு உண்மையிலேயே விருப்பம் இருந்தால் கீழே உள்ள என் நம்பருக்கு அழைத்து பேசலாம்.

இந்த பதிவை கண்டிப்பாக உங்கள் நண்பர்களோடு பகிருங்கள். பயிற்சி குறித்து சந்தேகம் ஏதேனும் இருந்தால் 8189919372 க்கு அழைக்கலாம்.

குறிப்பு: முதலில் பதிபவர்கள் என்று யாருக்கும் முன்னுரிமை இல்லை.  இந்த பயிற்சி முடிவில் Certificate எதுவும் வழங்கப்படமாட்டாது.

அதிகமான பதிவுகள் வந்ததால் எல்லோரையும் அழைத்து பேச முடியவில்லை. அதனால் இங்கிருந்த பார்மை எடுத்து விட்டேன் 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

One comment

  1. call me for web designing class
    i am from madurai 9364442500

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*