Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » தேர்வுக்கு அமேசான் உதவுகிறது! எப்படி?
தேர்வுக்கு அமேசான் உதவுகிறது! எப்படி?

தேர்வுக்கு அமேசான் உதவுகிறது! எப்படி?

இன்று மாபெரும் வளர்ச்சி பெற்று நிற்கும் மின் வணிக தளங்கள் அனைத்தும், ஒரு காலத்தில் புத்தகத்தை மட்டும் இணையத்தில் விற்க வந்தவர்கள் தான். ஆனால் இதில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இன்று ஆன்லைனில் என்ன வேண்டுமானலும் வாங்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.

அதுபோகட்டும். விசயத்திற்கு வருகிறேன். அமேசான் நிறுவனம் பிரத்தியோகமாக அரசு வேலைகளுக்கான தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் என்று அனைத்திற்குமான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் எக்ஸாம் சென்ட்ரல் (Exam Central) என்ற பெயரில் தனது இணையதளத்திலயே ஒரு பகுதி அமைத்து உள்ளது.

இதில் குறிப்பாக எல்லா புத்தகங்களும் சந்தையில் கிடைக்கும் விலையை விட குறைவான விலையிலயே கிடைக்கின்றன. அதோடு இந்த புத்தகத்தை வாங்கலாமா வேண்டாமா என்று நினைப்பவர்களுக்கு எதுவாக இந்த புத்தகத்தை ஏற்கனவே வாங்கி படித்தவர்களின், விமர்சனம் தரப்பட்டுள்ளது.

படிங்க: தேர்வுக்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள மென்பொருள் 

அதே போன்று எக்ஸாம் காலெண்டர் என்ற பகுதியில், எதிர்வரும் தேர்வுகள் குறித்த காலேண்டர் ஒன்றும் தரப்பட்டுள்ளது. இதைப் பார்த்து மாணவர்கள் தேவையான தேர்வுகளுக்கு விண்ணபிக்க முடியும். இப்படி புத்தகங்களை ஆன்லைனில் வாங்குவதில் சில நன்மைகள் உண்டு அதில் முதலாவது, கிராம புறத்தில் இருக்கும் ஒரு மாணவர் ஒரு புத்தகத்தை வாங்க எங்கும் அலைந்து திரிய வேண்டாம். இதற்காக சென்னையில் அல்லது வேறு எதாவது ஒரு பெரு நகரில் வசிக்கும் நண்பர், உறவினர்களை நாட வேண்டாம்.

படிங்க: கணினியில் தமிழில் டைப் செய்ய உதவும் மென்பொருள்

அதோடு, கோச்சிங் கிளாஸ் சேர்ந்து படிக்க முடியாதவர்கள் சிறு தொகை செலுத்தி ஆன்லைனில் புத்தகம் வாங்கி படிப்பது வெற்றிக்கு வழிவகுத்து கொடுக்கும் என்பது எனது நம்பிக்கை. நாட்டின் வறுமையை போக்க இன்று கல்வி தேவை. ஒருவனுக்கு காலம் முழுவதும் இலவசமாக சோறு போடுவதோடு, கல்வியை நீங்கள் இலவசமாக புகட்டினால், எதிர்காலத்தில் அவன் மூலமாக அந்த குடும்பமே வயிறாற உண்ணும்.

இந்த பதிவை படிக்கும் உங்களால் நன்றாக படிக்கும் மாணவன் ஒருவனுக்கு ஒரு நூறு ரூபாயில் ஒரு புத்தகம் வாங்கிக்கொடுக்க முடிந்தால் உலகில் எங்கோ ஒரு மூலையில் கல்வியும் மனித நேயமும் சாகாமல் இருக்கும் என்று நம்புகிறேன்.

தளம் செல்ல: http://goo.gl/axFJwJ

மற்றவர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள், நிச்சயம் உதவியாக இருக்கும்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.