Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » ஸ்மார்ட் போன் பிரிண்டர்
ஸ்மார்ட் போன் பிரிண்டர்

ஸ்மார்ட் போன் பிரிண்டர்

இன்று சாதாரணமாக 5 முதல் 20 மெகா பிக்ஸல் கேமரா திறனுடைய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றோம். என்றாவது நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போன் கேமரா மூலம் எடுத்த படத்தை உடனடியாக பிரிண்ட் செய்ய நினைத்ததுண்டா. நிச்சயம் இருக்காது.

டிஜிட்டல் பார்மட்டில் உங்கள் ஸ்மார்ட் போனில் வைத்து ரசித்து இருப்பீர்கள். மாறாக அதை பிரிண்ட் போட உங்களுக்கு நேரமும், அதற்கான யோசனையும் கூட இருந்திருக்காது. நிச்சயமாக டிஜிட்டல் வடிவில் ஒரு போட்டோவை பார்ப்பதற்கு பதிலாக பிரிண்ட் செய்து பார்தோமென்றால் அதில் ஒரு ஜீவன் இருக்கும் என்று சொல்கிறார்கள் அனுபவசாலிகள் சிலர்.

சரி விஷயத்திற்கு வருவோம். போட்டோ எடுத்தவுடன் உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்தே பிரிண்ட் செய்ய மைக்ரோமாக்ஸ் தற்சமயம் யு யூபிக்ஸ் என்னும் கையடக்க பிரிண்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 15.3 x 7.6 x 2.4 cm அளவே உள்ள இந்த பிரிண்டர் மூலம் 54 X 86 mm அளவுள்ள படங்களை பிரிண்ட் செய்ய முடியும். உங்கள் ஸ்மார்ட் போன் கேமராவில் படம் எடுத்த 60 நொடிக்குள் நீங்கள் பிரிண்ட் செய்துவிடலாம். தொடர்ச்சியாக இதில் 10 படங்கள் வரை பிரிண்ட் செய்ய முடியும்.

இதிலுள்ள பிரிண்டர் இங்க் சீக்கிரத்தில் தீர்ந்து போகாது. அப்படி தீர்ந்தாலும் புதிய இங்க் மாற்றியை வாங்கிக்கொள்ள முடியும். தற்போது, 6, 999 ரூபாய்க்கு அமேசான் மின்வணிக தளத்தில் கிடைக்கின்றது. விருப்பம் இருந்தால் வாங்கி பார்த்து உங்கள் அருமையான நிகழ்வுகளை நிஜப் படங்களாக மாற்றுங்கள்.

அமேசான் இணையதளத்தில் வாங்க

எனது பதிவுகளை இலவசமாக பெற

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*