Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » ஈசியா பிட்சாவில் பகிரலாம்
ஈசியா பிட்சாவில் பகிரலாம்

ஈசியா பிட்சாவில் பகிரலாம்

பொதுவாக நாம் பைல்களை பகிர மெயில் அல்லது கிளவுடு சேமிப்பு இடங்களை தேர்வு செய்கிறோம். ஆனால் இதில் சில சிரமங்கள் உண்டு, மெயிலில் பைல்களை அனுப்பும்போது, அவை 25 எம்.பீ க்குள் இருக்க வேண்டும். அதோடு சில ப்ரோக்ராம் வடிவில் உள்ள பைல்களை வைரஸ் அபாயம் காரணம் காட்டி மெயிலில் அனுப்ப மின்னஞ்சல் நிறுவனங்கள் தடை செய்துவிடுகின்றன.

இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் ட்ராப் பாக்ஸ் மற்றும் கூகிள் டிரைவில் கோப்புகளை பரிமாறும் போது அந்த கணக்கினை பெறுவதற்கு ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். இதோடு உங்கள் பைல் அந்த குறிப்பிட்ட கிளவுடு சேமிப்பு சர்வர்களில் இருக்கும். இது சில வேளை பாதுகாப்பானது இல்லை.

படிங்க: Bluetooth, Cable இல்லாமல் கணினியை ஸ்மார்ட் ஃபோனோடு இணைப்பது எப்படி ?

இதற்கெல்லாம் ஒரே தீர்வாக வருவதுதான், பைல்பிட்சா, இந்த இணையதளம் சென்று பதிவு செய்ய தேவையில்லை, உங்கள் பைல்கள் எங்கும் பதியப்பட போவதில்லை. இருப்பினும் உங்கள் பைல் பெருசோ அல்லது சிறுசோ பரிமாற்றம் செய்யப்படும்.

முதலில் http://file.pizza/ என்ற இணையதளம் சென்றுக் கொள்ளுங்கள். முகப்புப் பக்கத்தில் உள்ள, பைலை தேர்வு செய் பகுதியை கிளிக் செய்து, நீங்கள் அனுப்ப விரும்பும் பைலை தேர்வு செய்துகொண்டால் உங்களுடைய கோப்புக்கு ஒரு பிரத்தியோக இணைய முகவரி ஒன்று வழங்கப்படும்.

இந்த இணைய முகவரியை கோப்பைப் பெற விரும்பும் நபருக்கு அனுப்பி வைத்தால் போதும். பிறகு அவர் இந்த இணைய முகவரியை தனது பிரவுசரில் டைப் செய்தால் பைல் டவுன்லோடு ஆகிவிடும்.

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவு: ப்ளூ டூத் என்ற பெயர் வந்தது எப்படி ?

ஆனால் இதில் ஒரு நிபந்தனை போல், பைலை அனுப்பியவர் மற்றொரு முனையில் பைல் டவுன்லோடு ஆகும்வரை தனது பைல் பிட்சா பக்கத்தை மூடாமல் வைத்திருக்க வேண்டும். இதன் மூலமாகவே உங்கள் பைல் இணையத்தில் எங்கும் பதிவு செய்யப்படாமல் பகிரப்படுகிறது.

பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் இந்த தளம் பாதுகாப்பானதோடு உதவியாகவும் இருக்கும்.

என் பதிவுகளை இலவசமாக பெற : இங்கே கிளிக் செய்க

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*