Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » பயணிகளுக்கு ஒரு செயலி: வோர்டு லென்ஸ்
பயணிகளுக்கு ஒரு செயலி: வோர்டு லென்ஸ்

பயணிகளுக்கு ஒரு செயலி: வோர்டு லென்ஸ்

பெரும்பாலும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அவ்வபோது பயணம் செய்பவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினை என்றால், அது மொழிதான். ஒரு சிலருக்கு மற்ற மாநில மொழிகள் பேச தெரிந்தாலும், எழுத, படிக்க தெரியாது.

அதுபோன்ற சமயங்களில், உங்களுக்கு தெரியாத வேறு ஒரு மொழியில் உள்ள பெயர் பலகைகளை நீங்கள் மொழி பெயர்த்து அறிந்து கொள்ள விரும்பினால், நிச்சயம் இந்த வோர்டு லென்ஸ் செயலி உங்களுக்கு துணை புரியும்.

இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்துவிட்டு, மொழி மாற்றம் செய்ய வேண்டிய பெயர் பலகையை உங்கள் ஸ்மார்ட் போன் கேமரா மூலம், படம் எடுத்தால் போதும். நீங்கள் எந்த மொழியில் அந்த வார்த்தைகளை மொழி பெயர்க்க விரும்புகிறீர்களோ, அந்த மொழியிலையே மொழி மாற்றம் செய்துவிடும்.

இந்த செயலியை முதன் முதலில் குவஸ்ட் விஷுவல் என்னும் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன் பின்னர் கூகிள் இந்த செயலியை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. நிச்சயம் இந்த செயலி கூகிளின் டிரான்ஸ்லேட் அம்சத்திற்கு துணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

செயலி தரவிறக்கம் செய்ய : https://goo.gl/AeDbmW

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*