Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் ரெஸ்யூம் வேண்டுமா ?
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் ரெஸ்யூம் வேண்டுமா ?
Mark Zuckerberg First Page

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் ரெஸ்யூம் வேண்டுமா ?

மார்க் ஜக்கர்பர்க் என்று சொன்னாலே சின்ன குழந்தைக்கு கூட தெரியும் அவர் பேஸ்புக் நிறுவனர் என்று. அந்தளவிற்கு ஒரே ஒரு இணையதளம் மூலம் உலக மக்களை ஒன்றாக இணைத்த பெருமை ஜக்கர்பர்க்கை மட்டுமே சேரும்.

சரி. இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிறுவி அதில் லட்சக்கணக்கான பேர்களுக்கு வேலை கொடுத்த ஜக்கர்பர்க் இனிமேல் எந்த நிறுவனத்திற்கும் வேலை தேடிச் செல்லப் போவதில்லை. இருப்பினும் தன்னுடைய முந்தைய அனுபவங்களை வைத்துக்கொண்டு ஜக்கர்பர்க் ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றால் அவருடைய ரெஸ்யூம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் என்ஹான் சிவீ என்னும் நிறுவனம் ரெஸ்யூம் ஒன்றை வடிவமைத்துள்ளது.

அவர்கள் உருவாக்கி இருக்கும் ரெஸ்யூம் இப்படி விரிகிறது.

எனது புத்தகம் வாங்க: இங்கே கிளிக் செய்க

ஜக்கர்பர்க் படித்தது, ஹாவர்ட் பல்கலைகழகம். இவர் உளவியல் பாடத்தை படித்துள்ளார். இவருக்கு ஆங்கிலம் தவிர சீனம், பிரெஞ்சு உள்ளிட்ட ஐந்து மொழிகள் தெரியும். பேஸ்புக்குக்கு முன்னதாக பேஸ்மேஷ் எனும் சமூக வலைதளத்தை உருவாக்கி இருந்தாலும், ஹாவர்டின் கட்டளையின் பேரில் அந்த தளம் இழுத்து மூடப்பட்டது போன்ற விபரங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

அதன் பிறகு கோர்ஸ் மாட்ச், சினப்ஸ் மீடியா பிளேயர் என்று வரிசையாக தனது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இதில் குறிப்பிடும் படியாக இவருக்கு 12 வயது இருக்கும் போது, தனது பல் டாக்டர் தந்தைக்கு உதவும் வகையில் இவர் கண்டுபிடித்த ஜக் நெட் என்ற மென்பொருள் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் அடாரி பேசிக் மொழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர்தான் ஜக்கின் தந்தை ஜக்கர்பர்க்கிற்கு கணினி ப்ரோக்ராம்மிங் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் ஒருவரை நியமித்தார் என்பது கூடுதல் தகவல்.

நீங்களும் இந்த ரெஸ்யூமை பார்க்க விரும்பினால்: http://goo.gl/hCrIAo

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*