Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » உலகின் மிக மிக சத்தம் குறைந்த இடம் பற்றி தெரியுமா?
உலகின் மிக மிக சத்தம் குறைந்த இடம் பற்றி தெரியுமா?

உலகின் மிக மிக சத்தம் குறைந்த இடம் பற்றி தெரியுமா?

இன்றைய நகர வாழ்வாக இருக்கட்டும் அல்லது கிராம புற வாழ்க்கையாக இருக்கட்டும், சத்தம் என்பது எங்கும் நிறைந்து உள்ளது. வாகன போக்குவரத்து, அன்றாட வேலைகள் போன்றவை சுற்றுச்சூழலை சத்தம் நிறைந்ததாக மாற்றி விடுகின்றன.

சரி. இந்த உலகில் கொஞ்சம் கூட சத்தமே இல்லாத இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்க்கப் முடிகிறதா ? இந்த இடத்தில் நீங்கள் இருக்கும் வேளையில் உங்கள் இதயம் துடிப்பதும், நீங்கள் சுவாசிக்கும் சத்தமும் தெளிவாக கேட்கும் என்கிறார்கள், இதனை வடிவமைத்த மைக்ரோசாப்ட் பொறியாளர்கள்.

மைக்ரோசாப்ட், தனது பொறியாளர்களை கொண்டு, ரெட்மௌன்டில் உள்ள தனது அலுவலகத்தில், 87 கட்டடத்தில் உலகிலயே மிக அமைதியான சத்தம் குறைந்த அறையை தயார் செய்துள்ளது. இந்த அறையில் துளிக்கூட சத்தம் என்பதே கிடையாது. அதாவது இங்கு -20 .6 dba ஒலி அளவே நீடிக்கின்றது. தற்சமயம் வரை இந்த இடம் தான் உலகிலயே மிக அமைதியான இடமாக கருதப்படுகின்றது. அதோடு முந்தைய கின்னஸ் சாதனையான -13dbA –வை முறியடித்து இந்த அறை புதிய சாதனை புரிந்துள்ளது.

சரி. எதற்காக மைக்ரோசாப்ட் இந்த இடத்தை தயார் செய்துள்ளது. கின்னஸ் சாதனை படைக்கவா? இல்லை. மைக்ரோசாப்ட் அடுத்து வரும் தனது புதிய படைப்புகள் ஏற்படுத்தும் சத்தத்தினை அளக்க இந்த அறையை பயன்படுத்தப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மைக்ரோசாப்டின் கூற்றுப்படி, ஒரு கணினியை எடுத்துக் கொண்டோமென்றால் அது நம்மால் சாதாரண அறையில் கேட்க முடியாத ஒலியினை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அது போன்ற ஒலிகளை கட்டுக்குள் வைக்க, ஒரு ஆய்வு கூடம் போல் இந்த அறையை பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம், நிச்சயம் எதிர்காலத்தில் சத்தமே ஏற்படுத்தாத கருவிகள் நம் கையில் தவழ போவதை எதிர்பார்க்கலாம்.

என் பதிவுகள் இலவசமாக பெற இதை செய்யுங்கள்


The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.