Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » எனது புத்தகம் வாங்கலாமே !
எனது புத்தகம் வாங்கலாமே !

எனது புத்தகம் வாங்கலாமே !

கடந்த மூன்று மாதங்களாக இணையத்தில் நான் இல்லை. தளம் முடங்கி போனது தொடர்பாக பலரும் என்னை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தார்கள். சில அரசு தேர்வுகளுக்கு என்னை தயார்படுத்திக் கொள்வதற்காக தமிழ் எக்ஸ்ப்ளோரர் தளத்தில் எழுதுவதை சில காலம் நிறுத்தி வைத்திருந்தேன். 

தேர்வுகள் முடிந்து தற்போதுதான் கொஞ்சம்  ப்ரீ. அதனால் மறுபடி இணைய வேலைகளை பார்க்கலாம் என்று இறங்கியுள்ளேன். இம்முறை தொடர்ந்து நீங்கள் விரும்பிய வகையில் கட்டுரைகள் எழுதுவேன் என்று உறுதியாக சொல்ல முடியும்.

அதோடு வருகின்ற 2016- ல் சில புதிய முயற்சிகளை எடுக்கலாம் என்று இருக்கிறேன். அதன் படி ஆன்லைன் மூலமாக சி, பீ ஹச்.பீ  போன்ற கணினி சார்ந்த மொழிகளை சிறு கட்டணத்தோடு விருப்பமுள்ளவர்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

அதோடு வெப் ஹோஸ்டிங் சேவையையும் தொடங்கலாம் என்று உள்ளேன். எல்லாவற்றிக்கும் உங்கள் அதரவு தேவை.

முன்பு நான் சொல்லியிருந்தது போல என்னுடைய புத்தகம் அறிமுகம் ஆகியுள்ளது. ” வோர்ட்பிரஸ் மூலம் இணையம் வடிவமைக்கலாம்” என்ற பெயர் கொண்ட புத்தகத்தை நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். இந்த புத்தகத்தில் இணையத்தளம் தொடங்குவது பற்றியும் அதனை கொண்டு பணம் சம்பாதிப்பது பற்றியும் எழுதியுள்ளேன். கூடிய விரைவில் இப்புத்தகத்தில் உள்ளவற்றை ஒரு தனி பதிவாகவே போடுவேன்.

என் புத்தகத்தை வாங்க விரும்பினால் .

இந்தியாவில் இருந்து புத்தகம் வாங்க நினைப்பவர்கள்  இங்கே சொடுக்கலாம்

வெளிநாட்டில் இருந்து வாங்க நினைப்பவர்கள் இந்த ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும் : admin@tamilexplorer.com (or)  gguna431@gmail.com

நீங்கள் ஆர்டர் செய்ததும் புத்தகம் உங்களுக்கு 3 லிருந்து 5 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். இது பற்றி ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம் +818189919372

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.