Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » பொதுவானவை » ப்ளீஸ்… நடுவுல ஒரு மாதம் காணோம்
ப்ளீஸ்… நடுவுல ஒரு மாதம் காணோம்

ப்ளீஸ்… நடுவுல ஒரு மாதம் காணோம்

கடந்த மாதம் அவ்வளவு சரியாக பதிவுகள் எதுவும் போடவில்லை. சிவில் சர்விஸ் பரீட்சைகளுக்காக படித்துக்கொண்டிருந்த காரணத்தினால் மனது எங்கேயும் செல்ல மறுத்துவிட்டது. அந்தளவிற்கு கொஞ்சம் பிஸி..

இணையம் வாயிலாக அறிமுகம் ஆன நண்பர்கள் பலரும் மெயில் வாயிலாகவும், போன் வாயிலாகவும் நலம் விசாரித்து விட்டு, ஏன் பதிவுகள் போடவில்லை என்று கேட்டது மனதிற்கு சுகம். இதில் முத்தாய்ப்பாக என்னுடைய அண்ணனே நம்  தளத்தை தொடர்ந்து படித்து வருவதாகவும், ஏன் பதிவுகள் சரியாக வருவதில்லை என கூறியது என் இணைய எழுத்துக்கு ஒரு உந்துதலே!

இந்த மாதம் நடுவில் அல்லது முடிவில் என்னுடைய முதல் புத்தகமான “வோர்ட்பிரஸ் மூலம் இணையத்தளம் வடிவமைக்கலாம் வாங்க” என்ற   புத்தகம்  வெளிவர காத்திருக்கிறது. சென்னையை  சேர்ந்த நர்மதா பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிடுகிறார்கள்.

புத்தகம் வெளிவந்தவுடன் தனி பதிவாகவே பதிவு செய்வேன். தவறமால் புத்தகத்தை வாங்கி படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்துகளை சொன்னால் நலம்.

இனிமேல் ஓரளவிற்கு பதிவுகள் பதிய முயற்சி செய்கிறேன். தவறாமல் படித்து வாருங்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்!

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*