Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » தண்ணில போன் விழுந்துருச்சுன்னா இதை செய்யுங்க போதும்
தண்ணில போன் விழுந்துருச்சுன்னா இதை செய்யுங்க போதும்

தண்ணில போன் விழுந்துருச்சுன்னா இதை செய்யுங்க போதும்

சில நேரங்களில் வெளில போகும்போது நமது போன் மழையில நனையலாம் அல்லது நாமே கை தவறி சில நேரத்தில் தண்ணிக்குள் போட்டு விடலாம். இதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பழுது நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

அல்லது சர்விஸ் சென்டருக்கு எடுத்து செல்ல தேவையில்லை. உடனடியாக இதை செய்தால் போதும். உங்கள் போன் சரியாகிடும்.

உங்கள் போன் தண்ணில விழுந்த அடுத்த நொடி அதை வெளியில் எடுக்க பாருங்கள். முடிந்த வரை தண்ணிக்குள் விழுந்த 5 நொடிக்குள்ளாவது எடுத்து விடுங்கள்.

எடுத்தவுடன், பேட்டரி, மற்றும் சிம் கார்ட், மெமரி கார்டு போன்றவற்றை கழற்றி விடுங்கள். பின்னர் சுத்தமான துணி ஒன்றை வைத்து சீக்கிரமாக துடையுங்கள்.

துடைத்து முடித்ததும், அரிசியில் உங்கள் போனை ஒன்று அல்லது இரண்டு நாள் நன்றாக புதைத்து வைத்துவிடுங்கள். அரிசி உங்கள் போனில் உள்ள தண்ணீர் முழுவதையும் ஈர்த்து விடும்.

தப்பித்தவறி இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்து போனை ஆன் செய்துவிடவேண்டாம். பின்னர் சர்விஸ் சென்டருக்கு போகும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்.

இரண்டு நாட்கள் கழித்து உங்கள் போனை எடுத்து நல்ல சுத்தமான துணியை கொண்டு மறுபடியும் துடைத்து விட்டு, சிம், மெமரி கார்ட், பேட்டரி ஆகியவற்றை போட்டு, ஆன் செய்தால் உங்கள் போன் பழையபடி நன்றாக வேலை செய்யும்.

இந்த பதிவு என்னுடைய நண்பனின் அனுபவத்தில் இருந்து எழுதியது.

Summary: what should do if my phone drops into water

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.