இன்று பெரும்பாலும் எல்லோரும் சாம்சங் மொபைலை பயன்படுத்தி வருகிறோம். அப்படியிருக்க, சில நாட்களாக சாம்சங் போன்கள் ஹாக் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
எங்கு பிரச்சனை
சாம்சங் போனில் இருக்கும். ஸ்விப்ட் கீ கீபோர்டில் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது வெளிநாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, இந்த ஸ்விப்ட் கீ கீபோர் செயலி அப்டேட் செய்யப்படும் போது, சில மால்வேர்கள் உள்புகுந்து ஹாக் செய்யப்படும் அபாயம் மிகுந்ததாக நம் போனை மாற்றிவிடுகிறது.
இதனால் நம் போனில் உள்ள போட்டோ, படங்கள் , டாகுமென்ட், முக்கிய பாஸ்வோர்ட் போன்றவை களவாடபடலாம் என்பதே இங்கே நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.
இந்த ஸ்விப்ட் கீ கீபோர்டு ஒரு ஆப் (Android, iphone App)-தான் என்றாலும், இதை அன் இன்ஸ்டால் கூட செய்ய முடிவதில்லை என்பதே பலரின் ஆதங்கமாக உள்ளது. இப்போது இந்த 600 மில்லியன் போன்கள் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர, முயற்சியில் சாம்சங் நிறுவனம் இறங்கியுள்ளது என்றாலும், மற்ற ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு போட்டியாக வளர்ந்து வந்து கொண்டிருந்த சாம்சங் நிறுவனத்திற்கு இது பெரிய பின்னடைவு என்றே சொல்லலாம்.
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017