சமீப காலமாக ஸ்மார்ட் போன்களின் வருகையால், சாதாரண போன்களை மறந்தே விட்டோம் என்று சொல்லலாம். என்னதான் ஸ்மார்ட் போன்களில் ஏகப்பட்ட வசதிகள் இருந்தாலும், சிலருக்கு பேச ஒரு போன் இருந்தால் போதும், பேஸ்புக், வாட்ஸ்அப் என்று எதுவும் தேவை இல்லை. கூடுதலாக ஒரு வாரம் அளவிற்கு சார்ஜ் நின்றால் போதும்.
அந்த வகையில் தற்போது மைக்ரோமாக்ஸ் வெளியிட்டுள்ள ஜாய் எக்ஸ் 1800, ஜாய் எக்ஸ் 1850 என்ற இந்த இரண்டு வகை போன்கள் அமோக வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக குறைந்த விலையான ரூபாய். 699, ரூபாய். 749 க்கு கிடைக்கும் இந்த போன்களில் 0.08 எம்.பீ கேமரா, எப்.எம், அலாரம், பிளாஷ் லைட் என்று எப்போதும் சாதாரண ரக போன்களில் இருக்கும் வசதிகள் இந்த போனில் கிடைக்கின்றன.
1.77 இன்ச் திரைகளை கொண்ட ஜாய் எக்ஸ் 1800, ஜாய் எக்ஸ் 1850 போன்களில், 750 mAh ,1800 mAh பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது கடைகளில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள இந்த போன், கூடிய விரைவில் மின்வணிக தளங்களிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017