Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » என்.எப்.சி தொழில்நுட்பம் என்றால் என்ன?
என்.எப்.சி தொழில்நுட்பம் என்றால் என்ன?

என்.எப்.சி தொழில்நுட்பம் என்றால் என்ன?

Near Field Communication என்பதையே சுருக்கமாக என்.எப்.சி என்று சொல்லுகிறோம். தற்போது வெளிவரும் புதிய ரக போன்களில் இந்த தொழில்நுட்பம் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். தகவல்களை ஒரு ஸ்மார்ட் போனில்லிருந்து மற்றொரு போனுக்கு பரிமாற்றி கொள்ள இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. அதுசரி, தகவல்களை இலகுவாக பரிமாறிக்கொள்ள ப்ளூ டூத் தொழில்நுட்பம் இருக்கும்போது இது எதற்கு என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

இதற்க்கு இணைப்பு வேகத்தை ஒரு காரணமாக கூறலாம். சான்றாக ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் இரண்டு ஸ்மார்ட் போன்களை இணைப்பதை விட என்.எப்.சி தொழில்நுட்பம் மூலம் இரண்டு போன்களை இணைப்பது மிகவும் சுலபம், நேரமும் மிச்சம். ப்ளூடூத் மூலம் இரண்டு போன்களை இணைக்க வேண்டுமென்றால் சில நிமிடங்கள் தேவைப்படும், பிறகுதான் இரண்டு போன்களும் இணைக்கபடும். ஆனால் என்.எப்.சி யை பொருத்தமட்டில் பக்கத்தில் வைத்தாலே போதும். தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இது மட்டுமின்றி தகவல்களை பரிமாறி கொள்ள என்.எப்.சி ப்ளூடூத்தை விட குறைந்த மின்சாரத்தையே எடுத்துகொள்ளும்.

ஆனால் என்.எப்.சி யில் ஒரு குறை உண்டு, இது ப்ளுடூத்தை விட சற்று குறைவான வேகத்திலயே தகவல்களை அனுப்பும்.

என்.எப்.சி யின் மற்ற பயன்பாடுகள்

பொருட்கள் வாங்கி முடித்ததும், பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துவோம். ஆனால் கிரெடிட், டெபிட் கார்டு இல்லாமல் என்.எப்.சி தொழில்நுட்பம் மூலமே பாதுகாப்பாக பணம் செலுத்தலாம். பணம் வசூலிக்கும் கருவிக்கு அருகில் நமது ஸ்மார்ட் போனை ஒட்டி வைப்பது மூலம் பணம் பரிமாற்றம் நடைபெறும். பணபரிமாற்றதை பாதுகாப்பான கடவுச்சொல் மூலம் நீங்கள் கட்டுபடுத்தலாம். தற்போது கூகிள் வாலெட் இந்த முறையிலயே செயல்படுகிறது.

டிக்கெட் முன்பதிவு, வருகை பதிவேடு, பாதுகாப்பாக கணினியுனுள் நுழைவதற்கு என்று பல வகைகளில் என்.எப்.சி பயன்படுகிறது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.