Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » பேஸ்புக் @ வொர்க் ஒரு அலசல்
பேஸ்புக் @ வொர்க் ஒரு அலசல்

பேஸ்புக் @ வொர்க் ஒரு அலசல்

பேஸ்புக்ல உக்காந்து உருப்படாம போக போற” என்று பலரும் தங்களது குழந்தைகளை திட்டுவது போல பல உலகளாவிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் அலுவலகத்தில் பேஸ்புக் பயன்படுத்துவதற்க்கு தடை விதித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 80 பில்லியன் உற்பத்தி மணி நேரம் இந்த பேஸ்புக்கில் வீணாக போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே பேஸ்பூக்கை அலுவலகங்களில் தடை செய்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஆனால் தற்போது பேஸ்புக் எடுத்து வரும் புதிய முயற்சி மூலம், பேஸ்பூக்கை தடை செய்த நிறுவனங்களே திரும்ப சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் நிலை ஏற்படலாம். பேஸ்புக்@ வொர்க் (facebook@work) என்ற பெயரில் நிறுவனங்கள் பயன்பாட்டுக்கு மட்டும் உதவும் வகையில் தளம் ஒன்றை உருவாக்கிவருகிறது பேஸ்புக். இந்த பேஸ்புக்@வொர்க் மூலம் நீங்கள் உங்கள் அலுவலக பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேஸ்புக்@வொர்க் உங்களது அன்றாட அலுவலக பணிகளான அறிக்கை தயாரித்தல், மின்னஞ்சல் செய்தல், அலுவலக ஊழியர்களுடன் சேட் செய்தல், பொது தகவல்களை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், அலுவலக தகவல்களை சேமித்து வைத்தல் போன்ற பணிகளை எளிதாக்கும்.

இந்த பேஸ்புக்@வொர்க் தளத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் லண்டன்லில் தொடங்கி இப்போது சோதனையில் உள்ளது. பேஸ்பூக்கின் 8,000 பணியாளர்களை வைத்தே இந்த சோதனை நடைபெற்றுகொண்டிருக்கிறது.

சோதனையில் வெற்றி பெற்று பேஸ்புக்@வொர்க் வெளிவந்தால், லிங்கிடு இன் தளத்திற்கு போட்டியாக அமையக்கூடும் என்று சொல்லலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.