Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » உங்கள் குரலில் படங்கள் அனுப்பலாம்
உங்கள் குரலில் படங்கள் அனுப்பலாம்

உங்கள் குரலில் படங்கள் அனுப்பலாம்

நம்முடைய நண்பர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றுக்கு நாம் வாழ்த்து செய்தி கொண்ட படங்களை அனுப்புவோம். அப்படி அனுப்பும் போது அந்த படத்துடன் சேர்த்து நம் குரலையும் பதிவு செய்து அனுப்பினால் நன்றாக இருக்கும் தானே.   

வீம்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த ஆப் மூலம் படத்துடன் சேர்த்து நமது குரலையோ, அல்லது வேறு எதாவது ஒரு ஒலியையோ அனுப்பலாம். நீங்கள் விரும்பும் படத்தை தேர்வு செய்து கொண்டு இணைக்க வேண்டிய அல்லது பேசவேண்டிய ஒலியை அந்த படத்துடன் சேர்த்து கொண்டு வேண்டியவர்களுக்கு அனுப்பலாம், சமுக வலைதளங்களிலும் பகிரலாம். உங்கள் நண்பர் நீங்கள் அனுப்பிய படத்தை பார்க்கும்போது நீங்கள் அனுப்பிய ஒலியுடன் படம் அவருக்கு காண்பிக்கபடும்.

பிறகு உங்கள் நண்பர் அந்த படத்தை மாற்றம் செய்தோ அல்லது  செய்யாமலோ வேறு யாருடனும் பகிரலாம். இந்த புது வடிவ ஆப் எதிர்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தரவிறக்கம் செய்ய : Android | iOS

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.