பெயர் என்பது மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. நாம் யார் என்பதற்கு அடையாளமே இந்த பெயர்தான். அப்படிபட்ட பெயரை நீங்கள் ஒரு வேளை மாற்ற நினைத்தால், பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதற்கே இந்த பதிவு.
எப்படி விண்ணப்பிப்பது ?
விண்ணப்பங்களை இலவசமாக நேரிலோ அல்லது இணையதளம் (www.stationeryprinting.tn.gov.in) மூலமாகவோ நீங்கள் பெற்று கொள்ளலாம்.
நேரில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை விண்ணப்பங்கள் இந்த முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்
யாரெல்லாம் பெயர் மாற்றம் செய்யலாம்
இனிசியல் அல்லது முழு பெயரை மாற்றம் செய்யநினைப்பவர்கள் .
மதம் மாற்றம் செய்தவர்கள்,
விவாகரத்து பெற்றவர்கள்.
மேற்குறிப்பிட்ட நபர்கள் அவர்கள் வேண்டும் சேவைக்கேற்றார் போல் , குறிப்பிட்ட விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து விண்ணபிக்கவேண்டும்.
வேண்டிய ஆவணங்கள்
மதம் மாறி, அதன் படி பெயர் மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள், மதம் மாறியதற்கான ஆதார ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
விவாகரத்து பெற்று, அதன் படி பெயர் மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள், நீதிமன்ற தீர்ப்பு ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
இதனுடன் அவர்களுடைய தற்போதைய பெயர், வீட்டு முகவரி, புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எனில், அவர்கள் தாய், தந்தை அல்லது பராமரிப்பவர் ஒப்புதல் அளித்து பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.
கெசட்
தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, உங்கள் பெயர் மாற்றம் செய்த பிறகு கெசட்- ல் வெளிவரும். இதற்கென்று கட்டணம் செலுத்தி, உங்கள் பெயர் மாற்றம் செய்யபட்டதற்கான ஆவணங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் .
கட்டணம்
பொது கட்டணம் : ரூ.415
தமிழ் பெயர்கள் வைத்துக்கொண்டவர்களுக்கு : ரூ.115
திருநங்கைகள் : இலவசம்
குறிப்பிடத்தகுந்தவை
எதிர்கால தேவைகளுக்கு ஒரிஜினல் கெசட் ஆவணத்தை பத்திரமாக வைத்துக்கொண்டு, நகலை மட்டும் பயன்படுத்துங்கள்.
பாஸ்போர்ட் பெறுவதற்கு, பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான கெசட் ஆவணத்துடன், நோட்டரி அப்பிடவிட் (Affidavit), ஆங்கில,தமிழ் நாளிதழ்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான விளம்பர சான்று தேவை.
குழந்தைகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நினைப்பவர்கள், 8 ஆம் வகுப்புக்கு முன்போ அல்லது மேல்நிலை படிப்பிற்கு முன்போ பெயர் மாற்றம் செய்வது நல்லது.
மேலும் விவரங்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்: 044 – 28544413 அல்லது 28544414
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017