Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » மற்றவரின் ஜிமெயில்,பேஸ்புக் பாஸ்வோர்டை கண்டுபிடிக்கமுடியுமா?
மற்றவரின் ஜிமெயில்,பேஸ்புக் பாஸ்வோர்டை கண்டுபிடிக்கமுடியுமா?

மற்றவரின் ஜிமெயில்,பேஸ்புக் பாஸ்வோர்டை கண்டுபிடிக்கமுடியுமா?

மற்றவரின் ஜிமெயில்,பேஸ்புக் பாஸ்வோர்டை கண்டுபிடிக்கமுடியுமா? என்ற கேள்வி அனைவருக்கும் இந்த பதிவை படிக்கும் ஆர்வத்தை தூண்டலாம் .

ஆனால், உண்மையில் மற்றொருவரின் ஜிமெயில்,பேஸ்புக் பாஸ்வோர்டை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அப்படி நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், நீங்க இங்க இருக்க வேண்டிய ஆள் இல்லை. மாதம் 20 கோடி சம்பளத்தில் ஜிமெயில், பேஸ்புக் நிறுவனத்தில் தலைமை பொறியாளராக இருக்கலாம்.

ஏனென்றால் இந்த நிறுவனங்களின் பயனர் கணக்குகளின் பாஸ்வோர்டுகளை பாதுகாப்பதற்காகவே வருடத்துக்கு கோடி கணக்கில் செலவு செய்துகொண்டிருக்கிறது இந்த நிறுவனங்கள். சரி. அப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன்பு ஜிமெயில் பாஸ்வோர்டுகள் வெளியானதாக தகவல் வந்ததே. அது எப்படி ?

இதற்கு, ஜிமெயில் சொன்ன விளக்கம் ” எங்கள் நிறுவனத்தின் பயனர் கணக்குகளின் பாஸ்வோர்டுகள் ஹாக் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறு. ஒருவேளை அப்படியே  ஹாக் செய்யப்பட்டிருந்தாலும், அதற்கு காரணம், வாடிக்கையாளர்களின் கவன குறைவே, தவறான தளங்களில் தங்கள் ஜிமெயில் கணக்கின் தகவலை உள்ளீடு செய்வதின் மூலம், அவர்கள் கணக்குகள், ஹாக்கர்ஸ் கைவசம் சென்றிருக்கலாம். ஒரு வேலை உங்கள் கணக்கு ஹாக் செய்யபட்டிருக்குமா என்ற பயம் இருந்தால், இந்த தளத்துக்கு சென்று சோதித்து பார்த்துக்கொள்ளலாம்” என்ற தகவலையும்  வெளியிட்டது.

கூகுளில் சென்று “Hack Facebook Gmail password” என்று தேடிபார்த்தால் பல தளங்கள்,மென்பொருட்கள் , 100 % எங்களால் ஜிமெயில், பேஸ்புக் பாஸ்வோர்டுகளை கண்டுபிடிக்க முடியும் என்று உறுதி அளிக்கின்றனர். ஆனால் இது எல்லாம் சுத்த பொய் ?. அவர்களால், ஜிமெயில், பேஸ்புக் பாஸ்வோர்டுகளை கண்டுபிடிக்க முடியாது . உங்களிடம் ஹாக் செய்யப்பட வேண்டிய கணக்கின் யூசெர்நேம் மட்டும் வாங்கிகொண்டு, ஏதோ ப்ரோசெஸ் செய்வது போல் திரையில் பாவ்லா காட்டிவிட்டு, கடைசியில் ” நீங்கள் கொடுத்த யூசெர்நேம்னின் பாஸ்வோர்டை கண்டுபிடித்துவிட்டோம். 10 டாலரோ அல்லது 20 டாலரோ கட்டினால், பாஸ்வோர்ட் உங்களுக்கு  அனுப்பிவைக்கப்படும் என்று கூறுவார்கள். நம்பி பணம் கட்டினால், பட்டை நாமம்தான் நமக்கு.

இந்த மாதிரி தளங்களை நடத்துவதன் மூலம் என்ன பயன் அவர்களுக்கு ?

இவர்கள் தளங்கள் நடத்துவதே வருமானத்திற்குதான், அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். உதாரணமாக, நீங்கள் கொடுக்கும் ஜிமெயில், பேஸ்புக் கணக்குகளை தவறான வழிகளில் ஈடுபடுத்த, தவறான நிறுவனங்களிடம் விற்கலாம். ( உங்க ஜிமெயில் கணக்குகளுக்கு அடிகடி தவறான விளம்பர மின்னஞ்சல் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்) .

அடுத்தவரின் ஜிமெயில், பேஸ்புக் பாஸ்வோர்களை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், தங்கள் டெபிட் கார்ட், இன்டர்நெட் பாங்கிங் தகவல்களை, அந்த இணையதளத்தின் “Https” பாதுகாப்பை பார்க்காமல் பண பரிமாற்றம் செய்யும்போது, உங்கள் பேங்க் கணக்குகளின் அத்தனை தகவல்களும் அவர்களிடம் போய் சேர்ந்துவிடும்.

சிலநேரங்களில், ஒரு குறிப்பிட மென்பொருளை கொடுத்து, இந்த மென்பொருளை  உங்கள் கணினியில் நிறுவிகொண்டு, ஹாக் செய்யப்பட வேண்டிய கணக்கின் ஐடி கொடுங்கள் என்பார்கள். நாமும் அடுத்தவரின் பாஸ்வோர்டை கண்டுபிடித்து, அவர்களை குழியில் தள்ள நினைத்து நாம் குழிக்குள் விழுந்து விடுவோம், அவர்கள் உங்களிடம் வழங்கும் மென்பொருட்கள் அனைத்தும்        கீ லாக், ஸ்பை (keyLog, Spy) வகை மென்பொருட்களாக இருக்கும். நீங்கள் உங்கள் கணினியில் செய்யும் எல்லா விஷயத்தையும், இந்த மென்பொருளை உங்களிடம் கொடுத்த, அதன் எஜமானருக்கு, உங்களுக்கு தெரியாமலே இணையம் மூலம் அனுப்பிவிடும்.

அப்படியானால், ஜிமெயில், பேஸ்புக் பாஸ்வோர்டுகளை எவராலும் ஹாக் செய்யவே முடியாதா?

இதற்கு பதில். உலகில் ஒரு சில நபர்களால் முடியும். ஆனால் அவர்களால் முடியும் என்று தெரிந்தவுடன், நான் முன்னே சொன்னதுபோல அந்த நிறுவனங்கள், தங்களது குறையை சரிசெய்துகொண்டு, அந்த நபர்களையும் தன் நிறுவனத்தில் சேர்த்துகொள்கிறது. சமிபத்தில் கூட, மைக்ரோசாப்ட் தளத்தில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை பற்றி கண்டறிந்த நபர் அந்த நிறுவனத்தால் ஊக்குவிக்கபட்டு, அந்த நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள பட்டார்.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் ?

முதலில், நல்ல ஆண்டி வைரஸ் மென்பொருளை உங்கள் கணியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். இது உங்களை தவறான தளங்களுக்கு செல்வதையும் ,கீ லாக், ஸ்பை (keyLog, Spy) வகை மென்பொருட்களை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்வதையும் தடுக்கும்.

எக்காரணம் கொண்டும் உங்கள் வங்கி கணக்கின் தகவல்களை இணையத்தில் (நம்பகமான தளங்கள் தவிர்த்து) பகிராதீர்கள்.

கடைசியாக, அடுத்தவரை குழிக்கு அனுப்ப எண்ணி, நீங்க போய் மாட்டிகாதிங்க.

நண்பர்களுடன் பகிருங்கள்

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*