மெமரி கார்டு தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சான் டிஸ்க் நிறுவனம், தனது புதிய படைப்பான 512 GB கொள்ளளவு கொண்ட மெமரி கார்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.போடோக்ராபர்ஸ், மற்றும் படத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு இந்த மெமரி கார்டு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முழு நீள HD வீடியோக்களை எடுக்க இந்த சான்டிஸ்க் மெமரி கார்டை பயன்படுத்தலாம். இதனுடைய ட்ரான்ஸ்பர் ஸ்பீட் 95 mb/sec.
சான் டிஸ்க் அறிமுகபடுத்தியிருக்கும் இந்த மெமரி கார்டு ஷாக், தண்ணீர், x -ray போன்றவற்றை தாங்ககூடியவை. அதுமட்டுமில்லாமல் இவை -25 லிருந்து 85 c வரை தாங்கும். எனவே சினிமா துறையில் உள்ளவர்களுக்கும், போடோக்ராபர்களுக்கும் இந்த வகை மெமரி கார்டு பெரிய வரபிரசாதம்மாக இருக்கும் என கூறலாம். ஆனால் இந்த மெமரி கார்டை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடியாது.
இந்த மெமெரி கார்டின் விலை $799
இதே சான் டிஸ்க் நிறுவனம் 2003 ஆம் ஆண்டு தனது முதல் 512 MB அறிமுகபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017